Thu, Jun 19, 2025, 04:52:35 PM

About us

About us

வணக்கம்! 🙏

ஸ்ரீ மஹாவிஷ்ணு இன்போ இணையதளம் அர்ப்பணிப்பு உணர்வும் ஆன்மீக ஆர்வமும் அடித்தளமாக கொண்டு உருவாக்கப்பட்டது. இங்கு உள்ள அனைத்து பதிவுகளும் மிகுந்த உணர்வோடு, கவனத்துடன் தொகுக்கப்பட்டவை.

இந்த தளத்தின் முக்கிய நோக்கம் ஸ்ரீமன் நாராயணனின் கதைகள், இந்து தர்ம வழிகள், வழிபாட்டு முறைகள் ஆகியவற்றின் மூலம் ஆன்மீக வளர்ச்சிக்கும் நல்வாழ்விற்கும் வழிகாட்டுதல். நம் பாரம்பரிய நெறிகளை மீட்டெடுக்கும் முயற்சி இது.

நம் ஆலய வரலாறுகள், வழிபாட்டு முறைகள் போன்ற பழமையான தகவல்களை சுருக்கமாக உங்களுடன் பகிர்வதே எங்கள் நோக்கம். இவை உங்கள் வாழ்வில் சிறு ஒளியாக அமையும் என்ற நம்பிக்கை உள்ளது.

💡 இந்த எண்ணம் எனக்குள் (ஹரி) உருவானது. என் தோழியிடம் பகிர்ந்தபோது, அவர் ஆதரித்ததால் நாங்கள் இருவரும் ஒரு சிறிய வாட்ஸ்அப் குழுவில் பகிர்வுகளைத் தொடங்கினோம். இன்று அது…

  • 💬 100+ வாட்ஸ்அப் குழுக்கள்
  • 📘 5000+ முகநூல் பின்தொடர்பவர்கள்
  • 📸 2000+ இன்ஸ்டாகிராம் பின்தொடர்பவர்கள்
  • 📺 18,000+ YouTube சந்தாதாரர்கள்

…என வளர்ந்துள்ளது. இப்போது ஆங்கிலம், கன்னடம் போன்ற மொழிகளிலும் குழுக்கள் இயங்குகின்றன. மேலும் பல மொழிகளில் விரைவில் விரிவாக்கம் நடைபெறும்.

🙏 நன்றி தெரிவிக்கக்கூடிய நபர்கள்

  • 🌸 செல்வி. ஹேமலதா (பெங்களூரு) – துவக்கம் முதல் முழுமையாக பங்களித்தவர்
  • 🎙 திருமதி ரேவதி ஜெயராமன் (மலேசியா) – YouTube குரல் பதிவு சேவை
  • 🌸 திருமதி ரேவதி (சென்னை) – ஹிந்தி மொழிபெயர்ப்பு

எங்கள் பணியை ஆதரிக்கும் அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகள். இந்த தளம் உங்கள் ஆன்மீகப் பயணத்திற்கு ஒளிக்கற்றையாக அமையட்டும்.

ஓம் நமோ நாராயணாய! 🙏